ஹர்பஜன் சிங் அணியை வீழ்த்துமா இர்பான் பதான் அணி.? இன்று நேருக்கு நேர் மோதல்.!

Published by
செந்தில்குமார்

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று ஆறாவது போட்டியானது நடைபெறுகிறது. டெராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளது.

இந்த போட்டியானது இன்று மாலை 6:30 மணி அளவில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக நடந்த 5வது போட்டியில் இந்தியா கேபிடல்ஸ் மற்றும் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் அர்பன்ரைசர்ஸ் அணி 189 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்தியா கேப்பிடல் அணி, 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று ஆறாவது போட்டியானது நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்பஜன் சிங், மணிப்பால் டைகர்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார். முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரான இர்பான் பதான் பில்வாரா கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார்.

ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ

இந்த இரண்டு அணிகளுமே சிறப்பான ஃபார்மில் உள்ளது. அதிலும் குறிப்பாக பில்வாரா கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் இந்தியா கேப்பிட்டல் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் இர்ஃபான் பதான் மற்றும் சாலமன் அரை சதம் அடித்திருந்தனர்.

அதேபோல மணிபால் டைகர்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட் உடன் ஆன 2வது லீக் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தற்போது மணிபால் டைகர்ஸ் அணி ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பில்வாரா கிங்ஸ் அணி இரண்டு போட்டியில் ஒரு ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மணிபால் டைகர்ஸ் அணி

ராபின் உத்தப்பா(W), சாட்விக் வால்டன், ஹாமில்டன் மசகட்சா, கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் கோட்சர், திசரா பெரேரா, அமிடோஸ் சிங், இம்ரான் கான், ஹர்பஜன் சிங்(C), பிரவீன் குமார், மிட்செல் மெக்லெனகன், பர்விந்தர் அவானா, பிரவீந்தர் அவானா, எஸ் பத்ரிநாத், பங்கஜ் சிங், முகமது கைஃப், கோரி ஆண்டர்சன், டேவிட் ஒயிட்

பில்வாரா கிங்ஸ் அணி

சாலமன் மியர், திலகரத்னே தில்ஷன் (W), லெண்டல் சிம்மன்ஸ், ராபின் பிஸ்ட், பினால் ஷா, யூசுப் பதான், இர்பான் பதான் (C), கிறிஸ்டோபர் பார்ன்வெல், ஜெசல் கரியா, ராகுல் சர்மா, அனுரீத் சிங், ரியான் ஜே சைட்போட்டம், டிம் முர்தாக், தம்மிக்க பிரசாத், வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், ஷேன் வாட்சன், ப்ரோஸ்பர் உட்சேயா, இக்பால் அப்துல்லா

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

4 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

4 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

6 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

7 hours ago