ஆட்டநாயகன் ஷிவம் துபே! ஹர்திக் பாண்டியாவுக்கு விருது இல்லையா? டென்ஷனான ரசிகர்கள்!
ஹர்திக் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை என்பதால் ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று விட்டது. மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் உள்ளது. இருப்பினும், கடைசியாக ஒரு போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்றாலும் சர்ச்சையான சில விஷயங்களும் நடைபெற்றது என்றே கூறவேண்டும்.
குறிப்பாக, போட்டி நடந்து கொண்டிருந்தபோது இறுதி ஓவரில் ஜேமி ஒவர்டன் வீசிய பந்து ஷிவம் துபே ஹெல்மெட்டில் பட்டுவிட்டது. உடனடியாக மருத்துவ குழு களத்திற்கு வந்து முதலுதவி செய்தனர். இதனை அடுத்து சில பந்துகள் எதிர்கொண்டு ரன் அவுட் ஆகி பெவிலிலியன் திரும்பினார் துபே. உடனடியாக 2வது இன்னிங்ஸ் தொடங்கப்பட்ட நிலையில் துபே களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ராணா களமிறங்கினார்.
ஷிவம் துபே ஒரு ஆல் ரவுண்டர். சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன். அவருக்கு களத்தில் காயம் ஏற்பட்டால் இன்னொரு ஐசிசி விதிமுறைகளின் படி, அணியில் வேறொரு ஆல் ரவுண்டர் தான் களமிறக்கப்பட வேண்டும். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டார். இது இங்கிலாந்துக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துபேவுக்கு பதில் இறங்கிய ஹர்ஷித் ராணாபந்துவீசி 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஒவர்டன் ஆகிய முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் எப்படி இது சாத்தியம்? இது விதிமுறைகளை மீறுவது தானே என கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படாததும் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
ஏனென்றால், 4-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் 53 ரன்கள் எடுத்திருந்தாலும், ஹார்டிக் 30 பந்துகளில் இந்த ஸ்கோரை அடைந்தார், அதே நேரத்தில் ஷிவம் 34 பந்துகள் எடுத்தார். ஆனால், ஆட்டநாயகன் விருது ஷிவம் துபேவிற்கே வழங்கப்பட்டது.ஷிவம் துபேவைவிக்கு பிறகு தான் ஹர்திக் பாண்டியா களமிறங்கியிருந்தார். 30 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் என 53 ரன்கள் குவித்த அவருக்கு எதற்காக வழங்கப்படவில்லை எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
மேலும், போட்டியின் “மேன் ஆஃப் தி மேட்ச்” விருது ஷிவம் துபேவிற்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் தனது விருதை ஹர்திக் பாண்டியாவிற்கு கொடுத்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆட்ட நாயகன் விருதை சக வீரருக்கு வழங்கிய அவரது செயல் அனைவரின் மனதை கவர்ந்துள்ளது.