கொல்கத்தாவில் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு..காரணம் கங்குலி-மம்தா மோதலா??

Published by
kavitha

இந்தியா-தென்ஆப்ரிக்க அணிகள் விளையாடும் தொடர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிகிறது.

Image result for mamtha benarji southafrica playerஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருந்த நிலையில் முதல் போட்டி மழையால் ரத்தாகியது.இந்நிலையில் அடுத்த 2 போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தில் கைவிடப்பட்ட நிலையில். வழக்கமான அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க வீரர்கள் கோல்கத்தாவில் நடக்க இருந்த 3வது போட்டிக்குப் பின்னரே அதாவது மார்ச் 18 தங்களது நாட்டிற்கு திரும்ப இருந்தனர். இதனிடையே கோல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டியை   பிசிசிஐ ரத்து செய்தது குறித்து, கொல்கத்தா போலீசாருக்கு முறைப்படி தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து கூறுகையில்,கோல்கத்தாவில் போட்டி நடத்த வேண்டாம் என்று நாங்கள் உத்தர எதுவும் போட வில்லை. நீங்களாக  ஒரு முடிவு எடுத்துக் கொண்டால் எப்படி நன்றாக இருக்கும்.

மேலும் பேசிய அவர் நண்பர் கங்குலியுடனான நட்பு எல்லாம் சரி தான்.ஆனால் எங்களிடம் இது குறித்து ஒருவார்த்தை சொல்லியிருக்க வேண்டும். இங்கு நடத்த திட்டமிட்ட நிலையில் தலைமை செயலர், உள்துறை செயலர் அல்லது போலீஸ் கமிஷனர் அல்லது அரசாங்கத்தில் யாரோ ஒருவரிடம் ரத்து தொடர்பாக சொல்லியிருக்கலாம். என்று கூறியிருந்தார்.

இவ்வாறு முதல்வர் பேசிய நிலையில் கோல்கட்டா வந்து இறங்கிய தென் ஆப்ரிக்க அணி வீரர்களுக்கு, இங்குள்ள சிட்டி சென்டரில் அனுமதி மறுக்கப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்டதற்கு இதற்கு, மம்தா-கங்குலி மோதலா? அல்லது வேறு எதுவும் காரணமாக என்று தெரியவில்லை. வந்த இறங்கிய வீரர்களை  யாரும் கண்டுகொள்ளாததால், கோல்கத்தா விமான நிலையம் அருகில்  உள்ள ராஜார்ஹட் ஓட்டலில் தென் ஆப்ரிக்க வீரர்கள் தங்கினர்.இந்நிலையில்  ஒருநாள் முன்பாகவே வீரர்கள்  நேற்றே  தங்களது தாயகம் கிளம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
kavitha

Recent Posts

பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…

28 minutes ago

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

51 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

59 minutes ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

2 hours ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago