கொல்கத்தாவில் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு..காரணம் கங்குலி-மம்தா மோதலா??
இந்தியா-தென்ஆப்ரிக்க அணிகள் விளையாடும் தொடர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருந்த நிலையில் முதல் போட்டி மழையால் ரத்தாகியது.இந்நிலையில் அடுத்த 2 போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தில் கைவிடப்பட்ட நிலையில். வழக்கமான அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க வீரர்கள் கோல்கத்தாவில் நடக்க இருந்த 3வது போட்டிக்குப் பின்னரே அதாவது மார்ச் 18 தங்களது நாட்டிற்கு திரும்ப இருந்தனர். இதனிடையே கோல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டியை பிசிசிஐ ரத்து செய்தது குறித்து, கொல்கத்தா போலீசாருக்கு முறைப்படி தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து கூறுகையில்,கோல்கத்தாவில் போட்டி நடத்த வேண்டாம் என்று நாங்கள் உத்தர எதுவும் போட வில்லை. நீங்களாக ஒரு முடிவு எடுத்துக் கொண்டால் எப்படி நன்றாக இருக்கும்.
மேலும் பேசிய அவர் நண்பர் கங்குலியுடனான நட்பு எல்லாம் சரி தான்.ஆனால் எங்களிடம் இது குறித்து ஒருவார்த்தை சொல்லியிருக்க வேண்டும். இங்கு நடத்த திட்டமிட்ட நிலையில் தலைமை செயலர், உள்துறை செயலர் அல்லது போலீஸ் கமிஷனர் அல்லது அரசாங்கத்தில் யாரோ ஒருவரிடம் ரத்து தொடர்பாக சொல்லியிருக்கலாம். என்று கூறியிருந்தார்.