அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த மலிங்கா! போட்டியில் தோற்ற இலங்கை!
இலங்கை கிரிக்கெட் அணியின் யாக்கர் மன்னன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலிங்கா, தனது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, தற்போது டி20 போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை அணி உடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் 175 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இருந்தும், மலிங்கா தனது, உலகசாதனையை படைத்துள்ளார். அதாவது, இந்த டி20 போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி 20 போட்டியில் 74 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 98 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.