தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உட்பட 6 இளம் வீரர்களுக்கு “மஹேந்திரா தார்” ஜீப் பரிசு!
இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹேந்திரா, “தார்” ஜீப் பரிசாக வழங்கப்படும் என ஆனந்த் மஹேந்திரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நான்காம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி, 2 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.
மேலும், முதல் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்து, இருவரும் அரைசதத்தை நிறைவு செய்தனர். அதுமட்டுமின்றி, பவுலிங்கில் ஷர்துல் தாக்கூர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்தவகையில், தனது தந்தை இறுதி சடங்கிற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக ஆடினார்.
அதேபோல் தமிழக வீரர் நடராஜன், அனைத்து வகையான போட்டிகளிலும் அசதி, மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக மஹேந்திரா நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மஹேந்திரா, “தார்” ஜீப் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பகுதியில், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹிந்திரா “தார்” ஜீப்பை தனது சொந்த செலவில் பரிசளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.