புதிய சாதனை படைத்தார் மகேந்திர சிங் டோனி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி 7 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இறுதி ஆட்டத்தில் வங்கதேச இன்னிங்சின், 43-வது ஓவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி,வங்கதேச கேப்டன் மோர்தசாவை கண் இமைக்கும் நேரத்தில் அதிவேகமாக ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்தார்.
மோர்தசாவை ஸ்டம்பிங் செய்ததன் மூலம் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 முறை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.இந்த ஸ்டம்பிங் சாதனை மூலம் ஆசிய அளவில் முதலிடத்திலும்,சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் அதிக ஸ்டம்பிங்குடன் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் (998 முறை) முதலிடத்திலும்,ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் (905 முறை) இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU