டிஎன்பிஎல் தொடரின் இன்றைய CSG vs SMP போட்டியில், மதுரை பாந்தர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. இதில் வாஷிங்டன் சுந்தர் அதிரடி காட்டி அரைசதம் அடித்து அசத்தினார். இதனையடுத்து 142 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சேப்பாக் அணியில் முதலில் களமிறங்கிய சந்தோஷ் சிவ், ஜெகதீசன் ஜோடி நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர்.
இதில் பொறுப்பாக விளையாடிய சந்தோஷ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பாபா அபராஜித், ஜெகதீசன் உடன் இணைந்து நிதானமான விளையாடினார். ஜெகதீசன், அஸ்வின் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய சஞ்சய் யாதவ், பிரதோஷ் பால்,சசிதேவ் மற்றும் ஹரிஷ் குமார் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதி ஓவரில் பாபா அபராஜித் ஆட்டமிழக்க, முடிவில் சேப்பாக் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 35 ரன்களும், பாபா அபராஜித் 33 ரன்களும், சந்தோஷ் சிவ் 28 ரன்களும் குவித்தனர். மதுரை அணியில் தங்களது அட்டகாசமான பந்துவீச்சால் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…