இந்தியா vs இங்கிலாந்து: சிறந்த வீரராக என்னை மாற்றியது சென்னை அணி- சாம் கரண்!

Default Image

சென்னை அணிக்காக விளையாடிய குறுகிய காலத்தில் சிறந்த வீரராக மாறியதாக இங்கிலாந்து வீரர் சாம் கரண் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து டி-20 போட்டிகளும் தொடங்கவுள்ளது. இந்த டி-20 தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணியின் அதிரடி இளம் வீரர் சாம் கரண், இந்தியா வந்தடைந்தார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாம் கரண், கிரிக்கெட் குடும்பத்திலிருந்து வந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஒப்பனிங், ஃபினிஷிங் என அனைத்து விதத்திலும் சிறப்பாக விளையாடி வந்தார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். மேலும் சாம் கரண், இந்த T20 உலகக்கோப்பை ஆண்டில் ஒரு முக்கிய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என எதிர்பார்கிறார்.

சாம் கரண், 2019 ஆம் ஆண்டில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடி  ஐபிஎல் தொடரில் தனது வெற்றியைப் பதிக்க ஆரம்பித்தார். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரை 2020 ஆம் ஆண்டு வாங்கியது. இவர் சென்னை அணிக்காக பவர் பிளே ஓவரில் விளையாடி, ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று ஒரு இடத்தைப்  பிடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்று முறை சாம்பியன்களுக்கான  சில இடங்களில்  ஒருவராக இருந்தார்.மேலும் தனது 20 வயதில் IPL போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இளம் பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் பெற்றார்.

இந்நிலையில் சாம் கரண், “ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய குறுகிய காலத்தில் சிறந்த வீரராக மாறினேன். மாறுபட்ட நிலைகளில், வெவேறு சவால்களை எதிர்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்