எம்.எஸ். தோனிதான் என் முதல் கேப்டன்.. இதை அவரிடம் தான் தெரிந்துகொண்டேன் – மனம்திறந்த கேஎல் ராகுல்!

MS Dhoni and KL Rahul

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் கீழ் விளையாடி அனுபவத்தை பகிர்ந்தார் கே.எல்.ராகுல்.

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் மற்றும் அவரது பேட்டிங் மற்றும் அமைதியான இயல்புக்கு பெயர் பெற்றவர். இந்தியன் பிரீமியர் லீக்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த யை கேஎல் ராகுல், போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎஸ் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், “தி ரன்வீர் ஷோ” என்ற நிகழ்ச்சியில் பேசிய, இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் கீழ் விளையாடிய அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

அவர் கூறுகையில், எம்எஸ் தோனிதான் என் முதல் கேப்டன், ஒவ்வொரு மனிதரிடமும் நல்லுறவை எப்படி ஏற்படுத்திக்கொள்வது அவரை பார்த்துதான் கற்றுக்கொண்டேன். நல்ல உறவுகள் உங்களுடன் இருந்தால், கடினமான சூழல்களிலும் உங்களுக்கு உறுதுணையாக அவர்கள் இருப்பார்கள் என்பதை அவரிடம் தான் தெரிந்துகொண்டேன் என மனம்திறந்து பேசியுள்ளார்.

பின்னர் விராட் கோலி 6 முதல் 7 ஆண்டுகளாக எங்கள் கேப்டனாக இருந்தார், அவருக்குக் கீழ் இந்திய அணி செய்தது, அது தனிச்சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து ஆர்வமும், ஆக்கிரமிப்பும் கொண்டு வரப்பட்டது, அவர் மிகவும் உயர்ந்த தரத்தை அமைத்தார். மேலும் அவரது முன்னணி மற்றும் கேப்டனாகும் விதம், அணியை எப்படி முன்னின்று வழிநடத்துவது மற்றும் உள்ளிட்டவை சிறந்தவை.

அவர் செய்யும் செயல்களால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம், அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இதன்பின், ரோஹித் ஷர்மா, ஒரு கேப்டனாக, அவரது உத்திகள், ஒரு கேப்டனாக, அவர் விளையாட்டுக்கு முன் நிறைய யோசிப்பார். ஒவ்வொரு நபரின் பலம் மற்றும் அவர் என்ன செய்வார் என்பது அவருக்குத் தெரியும் என்றார்.

மேலும், விளையாட்டு வீரர்களின் குறைபாடுகள் மற்றும் அவர் உத்திகள் மற்றும் விளையாட்டைப் புரிந்துகொள்வதில் உண்மையில் சிறந்தவர். இவையனைத்தும் நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் என கேஎல் ராகுலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மனம்திறந்து பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்