ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!
ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs DC அணிகளுக்கு இடையே முதல் போட்டி மதியம் 3:30-க்கு தொடங்கிய நிலையில், இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தி ல்ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
தற்போது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய போகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR):
கேப்டன் ரியான் பராக் தலைமையிலான அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG):
கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையிலான அணியில், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று, தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 போட்டிகளில், 2-ல் மட்டுமே வெற்றி பெற்று தடுமாறுகிறது. இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு காயத்தில் இருந்து மீளவில்லை. இதனால், இன்றைய நாள் போட்டியில் கேப்டனாக ரியான் பராக் தலைமை தாங்குகிறார்.