லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

தோனி ரோஹித் வரிசையில் ரிஷப் பண்ட் பெயரும் சிறந்த கேப்டன் பட்டியலில் இடம்பெறும் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

Rishabh Pant

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட்  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடைபெற்ற நிலையில், அதில் சஞ்சீவ் கோயங்கா  இதனை அறிவித்தார். ரிஷப் பண்ட்  அணியின் கேப்டனாக பொறுப்பேற்கவுள்ள தகவல் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.

ஏனென்றால், ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்றபோதே ரூ.2 கோடி அடிப்படை விலையில் தொடங்கி ரூ.27 கோடியாக ரிஷப் பண்ட்  பெயர் ஏலத்தில் சென்ற நிலையில், 27 கோடி கொடுத்து லக்னோ அணி ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுத்தது. இதற்கு முன்பு டெல்லி அணிக்காக கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் நிர்வாகம் விடுவித்தவுடன் லக்னோ  தங்களுடைய அணிக்கு எடுத்து.

இத்தனை கோடி செலவு செய்து அவரை எடுத்தபோதே அவர் தான் நிச்சியமாக கேப்டனாக செயல்படுவார் என்பதனை பலரும் கணித்து கூறத்தொடங்கிவிட்டார்கள். இருப்பினும் நிர்வாகம் சார்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகாமல் இருந்த சூழலில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சஞ்சீவ் கோயங்கா ”  கண்டிப்பாக பண்ட் தலைமையில் அணி வெற்றிபெறவேண்டும் என நான் விரும்புகிறேன்.

இன்னும் ரிஷப் பண்ட் 10 அல்லது 15 வருடங்கள் கூட விளையாடுவார் என நினைக்கிறன். ஐபிஎல்லின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்கள் பட்டியலில் இப்போது மக்கள் ‘மஹி, ரோஹித்’ என்று கூறுகிறார்கள். என் வார்த்தைகளைக் கவனியுங்கள், 10-12 ஆண்டுகளுக்குப் பிறகு அது ‘மஹி, ரோஹித் மற்றும் ரிஷப் பந்த்’ என்று இருக்கும். ரிஷப் பண்டை நான் பார்க்கும்போது அவரிடம்  ஒரு பிறவித் தலைவர் இருக்கிறார் என்பதை  நான் காண்கிறேன். என் பார்வையில், அவர் இந்த முறை ஐபிஎல் இதுவரை கண்டிராத சிறந்த கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” எனவும் சஞ்சீவ் கோயங்கா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்