LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்களும், ஆடம் மார்க்ரம் நிலைத்து ஆடி 38 பந்தில் 53 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.
நிகோலஸ் பூரான் 12 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். ஆயுஷ் படோனி 19 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இளம் வீரர்கள் விக்னேஷ் புதூர் மற்றும் அஸ்வனி குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். டிரெண்ட் போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினார்.
20 ஓவரில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரர்கள் வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் முறையே 5 மற்றும் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். நமன் திர் 46 ரன்கள் எடுத்தார். நிலைத்து ஆடிய சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 9 பவுண்டரி ஒரு சிக்ஸ்ர் என 67 ரன்கள் எடுத்தார்.
திலக் வர்மா 25 rரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட்டாகி வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் எடுத்து இறுதி வரை மும்பை வெற்றிக்கு போராடினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தங்கள் சொந்த மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஐபிஎல் 2025-ல் தங்களின் 2வது வெற்றியை பதிவு செய்துளளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025