LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
லக்னோ – டெல்லி அணிகள் மோதிய முதல் போட்டியில் டெல்லி அணி லக்னோவை வீழ்த்தியதால் இந்த போட்டியில் டெல்லியை பழிவாங்குமா லக்னோ என எதிர்நோக்கப்படுகிறது. டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் முனைப்பில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.
LSG-ன் தொடக்க வீரர்களான ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். மார்க்ரம் 33 பந்தில் 52 ரன்கள் அடித்தார். மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 45 ரன்கள் விளாசி இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அளித்தாலும் அடுத்தடுத்து டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் லக்னோ ரன் எடுக்க திணறினர். நிக்கோலஸ் பூரன் 9 ரன்கள் எடுத்தும் அப்துல் சமத் 2 ரன்னிலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
டேவிட் மில்லர் ஆயுஷ் படோனி இறுதியில் சற்று அடித்து ஆடி ரன்கள் சேர்த்தனர். ஆயுஷ் படோனி 36 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். டேவிட் மில்லர் 14 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். கேப்டன் ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் ஆகி வெளியேறினார்.
டெல்லி அணி சார்பாக முகேஷ் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியை வெல்ல டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 160 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்து களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025