லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொளுது லக்னோ அணி களமிறக்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்த ப்ரித்வி ஷா, 34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 61 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து டேவிட் வார்னர், 4 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ரோமன் போவெல், 3 ரன்கள் அடித்து வெளியேற, அவரைதொடர்ந்து ரிஷப் பந்த் – சர்பராஸ் கான் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயர்ந்தது. இதில் ரிஷப் பந்த் 39 ரன்கள் அடித்தும், சர்பராஸ் கான் 36 ரன்கள் அடித்தனர். இறுதியாக டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது லக்னோ அணி களமிறங்கவுள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…