ஐபிஎல் 2024: பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024:  இன்றைய போட்டியில் 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர்.

இந்த போட்டியில் தொடக்க வீரரான குயின்டன் டி காக் அதிகபட்சமாக 56 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட மொத்தம் 81 ரன்கள் குவித்தார். மத்தியில் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 21 பந்தில் 5 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி உட்பட  40* ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் கடைசிவரை இருந்தார். 19-வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார்.

அதேநேரத்தில் கே.எல் ராகுல் 20,  மார்கஸ் ஸ்டோனிஸ்  24 ரன் எடுத்தனர். பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டையும்,  சிராஜ், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள் தலா 1 விக்கெட்டை பறித்தனர். பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் சற்று சிறப்பாக அமைந்தாலும் அது நிலைத்து நிற்கவில்லை 5 ஓவரில் விராட்கோலி 22 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

மறுமுனையில் இருந்த பிளெசிஸ் அடுத்த ஓவரில் 19  ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.  அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 9 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல்  டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் 58 ரன்களுக்கு  பெங்களூரு அணி  4 விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வெறும் 4 ரன் மட்டுமே எடுத்தார்.

இருப்பினும் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். இறுதியாக 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டையும், மார்கஸ் ஸ்டோனிஸ் , மணிமாறன் சித்தார்த், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

 

 

Published by
murugan

Recent Posts

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

1 hour ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

2 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

2 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

5 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

5 hours ago