ஐபிஎல் 2024: பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர்.
இந்த போட்டியில் தொடக்க வீரரான குயின்டன் டி காக் அதிகபட்சமாக 56 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட மொத்தம் 81 ரன்கள் குவித்தார். மத்தியில் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 21 பந்தில் 5 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி உட்பட 40* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை இருந்தார். 19-வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார்.
அதேநேரத்தில் கே.எல் ராகுல் 20, மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன் எடுத்தனர். பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டையும், சிராஜ், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள் தலா 1 விக்கெட்டை பறித்தனர். பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் சற்று சிறப்பாக அமைந்தாலும் அது நிலைத்து நிற்கவில்லை 5 ஓவரில் விராட்கோலி 22 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் இருந்த பிளெசிஸ் அடுத்த ஓவரில் 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 9 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் 58 ரன்களுக்கு பெங்களூரு அணி 4 விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வெறும் 4 ரன் மட்டுமே எடுத்தார்.
இருப்பினும் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். இறுதியாக 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டையும், மார்கஸ் ஸ்டோனிஸ் , மணிமாறன் சித்தார்த், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.