LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!
லக்னோ அணியை அதன் சொந்த மைதானத்தில் 18 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இளந்தனர். தொடக்க வீரர் மிட்செல் மார்ஸ் டக் அவுட் ஆகியும், ரிஷப் பண்ட் 2 ரன்னிலும் வெளியேறினர்.
ஐடன் மார்க்ரம் 28 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 44 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். டேவிட் மில்லர் 19 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் படோனி மற்றும் அப்துல் சமத் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை கணிசமான அளவுக்கு உயர்த்தினர். ஆயுஷ் படோனி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தும், அப்துல் சமத் 27 ரன்களும் எடுத்து 20வது ஓவரில் இருவரும் அவுட் ஆகினர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 171 ரன்கள் எடுத்தது. 20 ஓவரில் 172 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கியது. தொடக்கத்தில் பிரியன்ஸ் ஆர்யா மட்டும் 8 ரன்னில் அவுட் ஆகினார். பிராப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 69 ரன்கள் விளாசி இலக்கை விரைவாக அடைய பஞ்சாப் அணிக்கு பெரிதும் உதவினார்.
இறுதியாக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 30 பந்துகளில் 52 ரன்களும், நேஹல் வதேரா 43 ரன்களும் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது பஞ்சாப் அணி. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் விளையாடிய 2 போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.