LSGvsMI: சிக்ஸர்களை பறக்கவிட்ட ஸ்டோனிஸ்..! மும்பை அணிக்கு இலக்கை நிர்ணயித்தது லக்னோ..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI போட்டியில், முதலில் பேட் செய்த லக்னோ அணி 177/3 ரன்கள் குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில்  பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. அதில் குயின்டன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து, களமிறங்கிய க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஆனால், அரைசதம் எட்டவிருந்த பாண்டியா 49 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இறுதிவரை நிற்க இன்னிங்ஸ் முடிந்தது.

முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 89* ரன்களும், க்ருனால் பாண்டியா 49 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை அணியில் ஜேசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

3 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

3 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

4 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

5 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

6 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

7 hours ago