#LSGvsKKR: முதலிடத்துக்கு முன்னேறுமா லக்னோ?.. டாஸ் வென்றது கொல்கத்தா!

Default Image

இன்றைய தினத்தின் இரண்டாவது ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு.

ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதுவரை 10 போட்டிகள் விளையாடி உள்ள லக்னோ அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுபோன்று கொல்கத்தா அணி 10 போட்டிகளில் 4 மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது.

இதனால் கொல்கத்தா அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது. வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் மறுபக்கம் லக்னோ அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கி இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணியை ரன் ரேட் அடிப்படையில் பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் லக்னோ முதலிடத்துக்கு முன்னேறும். இதனால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): ஆரோன் பிஞ்ச், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சவுத்தி, சிவம் மாவி, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மொஹ்சின் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்