ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs PBKS போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. லக்னோ அணி, 3 போட்டியில் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், பஞ்சாப் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 வது இடத்திலும் இருக்கின்றன.
இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டியில் லக்னோ அணி வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு அதிரடியாக விளையாடும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (பிளேயிங் லெவன்):
கே.எல். ராகுல் (C), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (W), ஆயுஷ் படோனி, அவேஷ் கான், யுத்விர் சிங் சரக், மார்க் வூட், ரவி பிஷ்னோய்
பஞ்சாப் கிங்ஸ் அணி (பிளேயிங் லெவன்):
அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, சிக்கந்தர் ராசா, சாம் குர்ரன் (C), ஜிதேஷ் சர்மா (W), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…