LSG vs PBKS : டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு.!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs PBKS போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பவுலிங் தேர்வு.

16-வது  ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. லக்னோ அணி, 3 போட்டியில் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், பஞ்சாப் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 வது இடத்திலும் இருக்கின்றன.

இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டியில் லக்னோ அணி வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு அதிரடியாக விளையாடும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (பிளேயிங் லெவன்): 

கே.எல். ராகுல் (C), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (W), ஆயுஷ் படோனி, அவேஷ் கான், யுத்விர் சிங் சரக், மார்க் வூட், ரவி பிஷ்னோய்

பஞ்சாப் கிங்ஸ் அணி (பிளேயிங் லெவன்): 

அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, சிக்கந்தர் ராசா, சாம் குர்ரன் (C), ஜிதேஷ் சர்மா (W), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்