LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

மும்பை அணிக்கு எதிராக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

LSG vs MI - IPL 2025 (1)

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனை அடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் எடுத்து 7வது ஓவரில் விக்னேஷ் புதூர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நிகோலஸ் பூரான் 12 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்ட் இந்த முறையும் பெரிய ரன் அல்ல இரண்டு இலக்கம் கூட இல்லாமல் 2 ரன் மட்டுமே எடுத்து MI கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். ஆயுஷ் படோனி 19 பந்தில் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வனி குமார் பந்துவீச்சில் அவுட் ஆகினர்.

தொடக்க வீரர் ஆடம் மார்க்ரம் நிலைத்து ஆடி 38 பந்தில் 53 ரன்கள் எடுத்து, ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 18வது ஓவரில் அவுட் ஆகினார் . அப்துல் சமத் 4 ரன்னில் வெளியேறினார். டேவிட் மில்லர் 27 ரன்கள் அடித்தார். ஆகாஷ் தீப் வந்தவுடன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணி சார்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா லக்னோ அணியின் ரன் வேகத்தை தனது சூழலில் சிக்க வைத்தார். அவரது பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இளம் வீரர்கள் விக்னேஷ் புதூர் மற்றும் அஸ்வனி குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். டிரெண்ட் போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்