#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 63-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது. 

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினார்கள். இதில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பட்லர் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 32 ரன்கள் அடித்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, ஜெய்ஸ்வால், 41 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய படிக்கல் 39 ரன்களுக்கும், ரியான் பராக் 19 ரன்கள் எடுத்து தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது லக்னோ அணி பேட்டிங் செய்யவுள்ளது.

Published by
Surya

Recent Posts

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

8 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

9 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

9 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

10 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

11 hours ago