#IPL2022: ஹெட்மெயர் அதிரடி.. லக்னோ அணிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 20-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள். நிதானமாக ஆடத்தொடங்கிய பட்லர் 13 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 13 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் களமிறங்கிய ரஸ்ஸி, 4 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சிம்ரன் ஹெட்மயர், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்ட தொடங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த அஸ்வின், retire out முறையில் வெளியேறினார்.
அவருக்கு பதிலாக ரியான் பராக் களமிறங்கி 8 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 36 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது லக்னோ அணி களமிறங்கியுள்ளது.