பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது? குல்தீபிடம் சேட்டை செய்த ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ இதோ…
நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் குல்தீப்பை கிரீஸை விட்டு வெளியே தள்ளி சேட்டை செய்துள்ளார் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்.

விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் வழக்கமான சேட்டைகள் இங்கும் தொடர்ந்தன. டெல்லி வீரர் குல்தீப் யாதவ் விளையாடி கொண்டிருக்கும் போது அவரை கிரீஸிலிருந்து வெளியே தள்ளி ஸ்டம்ப் பெயில்களை அகற்றினார். இந்த சேட்டை செயல் மைதானத்தில் இருந்த ரசிகர்களை சிரிக்க வைத்தது.
ரிஷப் பண்ட்டின் இந்த சேட்டையில் இது புதிதல்ல. வழக்கமாகவே தான் மைதானத்தில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் தனது சேட்டைகளால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். கடந்த ஆண்டு வரை டெல்லி அணிக்காக விளையாடிவிட்டு இந்த முறை லக்னோ கேப்டனாக டெல்லி அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்கியதால் தனது பழைய டெல்லி நண்பர்களுடன் இந்த சேட்டையை செய்துள்ளார் ரிஷப் பண்ட்.
நேற்றைய ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற 18 பந்தில் 39 ரன்கள் தேவை என்ற நிலையில் மைதானத்திற்குள் வந்த குல்தீப்பை அவர் பேட்டிங் செய்ய முற்படும் போது லேசாக தள்ளிவிட்டு ஸ்டம்ப் பெயில்ஸை தட்டிவிட்டார் ரிஷப் பண்ட். இறுதியில் 18.3 ஓவரில் குலதீப் 5 ரன் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பண்ட், குல்தீப்பை ரன் அவுட் செய்தார்.
இதற்கு முன்னதாக, 2022 ஐபிஎல் சீசனில், பயிற்சியின் போது ரிஷப், குல்தீப்பின் ஹெல்மெட்டை எடுத்து மறைத்து வைத்து, அவரை தேட வைத்த சம்பவம் ரசிகர்களிடையே பிரபலமானது. ரிஷப்பின் இந்த சேட்டைகள், அவரது ஆட்டத்திறமை மட்டுமல்லாமல், அணியில் ஒரு மகிழ்ச்சியான சூழலை அணி வீரர்கள் மத்தியில் பராமரிக்கும் திறனை வெளிகாட்டுகிறது.
Pant being naughty with Kuldeep🤣🤣 #IPL #DCvLSG pic.twitter.com/uatkYVLfsx
— RocketNitro1992 (@RNitro1992) March 24, 2025