பெரும் சிக்கலில் லங்கன் ப்ரீமியர் லீக்.. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா?
இலங்கையில் நடைபெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக் தொடர், திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி, தற்பொழுது எழுந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களை போல, உலகளவில் பல டி-20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிக்-பேஷ் லீக், பாகிஸ்தான் பிரிமியர் லீக் உள்ளிட்ட பல தொடர்கள் நடந்தாலும், ஐபிஎல் தொடர் போல இதுவரை எந்தொரு தொடரும் அமைவதில்லை. இந்தநிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் முன்னணி வீரர்களை உள்ளடக்கி, லங்கன் பிரீமியர் லீக் என்ற தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது.
அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அதற்கான ஆந்தம் பாடலை வெளியிட்டுள்ளது. அந்த பாடலில் இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்த தொடர் நடைபெறுவதில் தற்பொழுது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. போட்டிகளே இன்னும் தொடங்காத நிலையில், அதிரடி வீரர் கிறிஸ் கெயில், லசித் மலிங்கா, இங்கிலாந்து வீரா் லியாம் ப்லன்கேட், சப்ராஸ் அஹமது ஆகிய வீரர்கள் தொடரில் இருந்து விலகினார்கள்.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர், ரவீந்திர பால் சிங்க் ஆலியா வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி, தற்பொழுது எழுந்துள்ளது.