டி-20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர்! மோசமான சாதனை படைத்த சிட்னி தன்டர்.!
டி-20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஸ்கோர் அடித்து மோசமான சாதனை படைத்துள்ளது சிட்னி தன்டர் அணி.
ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் ஒரு டி-20 லீக் தொடர் தான் பிக் பேஷ் தொடர். இத்தொடரில் நேற்று அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணிக்கு எதிராக சிட்னி தன்டர் அணி 6 ஓவர்கள் மட்டுமே விளையாடி 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இது டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைவாக அடிக்கப்பட்ட ஸ்கோராக பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக 2019இல் செக் குடியரசுக்கு எதிராக துருக்கி அணி 21 ரன்கள் எடுத்ததே டி-20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது சிட்னி தன்டர் 15 ரன்கள் எடுத்து இந்த மோசமான சாதனையை படைத்திருக்கிறது.
டி-20 கிரிக்கெட்டில் பொறுத்தவரை 20 ஓவர்களில் ஒரு அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எடுக்கும், சில நேரங்களில் அது நடக்காமல் போகலாம். 20 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் நிலையில் எல்லா பேட்ஸ்மேன்களும் அதிரடியாகவே ரன் குவிக்க முயற்சி செய்வார்கள்.
கிரிக்கெட்டில் அடுத்த பரிணாமமாக கருதப்பட்டு வரும் ஒரு குறுகிய கிரிக்கெட் ஃபார்மட் தான் டி-20 கிரிக்கெட், இது கிட்டத்தட்ட 3 மணிநேரத்தில் முடியக்கூடிய கிரிக்கெட்டின் அடுத்தகட்ட நிலையாக பார்க்கப்படுகிறது. மற்ற எந்த விளையாட்டுகளும் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளப்படுமா என்பது சந்தேககம் தான்.