விராட் கோலியை கிண்டல் செய்யாதீர்கள் ! மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் அமிதாப் எச்சரிக்கை

Default Image
  • முதலாவது டி -20 பொடியில் இந்திய அணி கேப்டன் விராட் வில்லியம்சனின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு அவரது (வில்லியம்சன் )நோட்புக் ஸ்டைலில் கொண்டாடினார்.
  • மேற்கு இந்திய தீவுகள் வீரர்களை விராட் கோலி ரொம்ப பயமுறுத்திவிட்டார் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே முதலாவது டி -20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 207 ரன்கள் அடித்தது.207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.இவருடன் களமிறங்கிய ராகுல் நிலைத்து நின்று ஆடினார்.ரோகித் வெளியேறியதும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.முதலில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார்.ஆனால் போக போக தனது ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

அந்த சமயத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளரான வில்லியம்ஸ் ஓவரை பதம்பார்த்து கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் விராட் வில்லியம்சனின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு வில்லியம்ஸனின்நோட்புக் ஸ்டைலில் கொண்டாடினார்.சுமார்  2 ஆண்டுகளுக்கு முன்னர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் வில்லியம்சன் இதே போல் விராட் கோலியை கிண்டல் செய்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் தற்போது நடைபெற்ற போட்டியில் நோட்புக் ஸ்டைலை பின்பற்றினார்.

இந்த நிலையில் இது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது நடிப்பில் வெளியான அமர் அக்பர் அந்தோணி படத்தின் வசனத்தை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், விராட் கோலியை கிண்டல் செய்து வெறுப்பேற்ற வேண்டாம் என்று நான் எத்தனை முறை கூறினேன் , ஆனால் நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, இப்போது அவர் உங்களுக்கு ஒரு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.மேற்கு இந்திய தீவுகள் வீரர்களின் முகத்தைப் பாருங்கள், விராட் கோலி அவர்களை எவ்வளவு பயமுறுத்திவிட்டார் என்று ட்வீட் செய்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் எப்போதும் உத்வேகம் அளிக்கக்கூடியவர் என்று  பதிவிட்டிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
ICC Champions - Indian cricket team
ed - chennai high court
TN CM MK Stalin say about Murders in Tamilnadu
Adhik Ravichandran about Good Bad Ugly
Minister geetha jeevan speak in tn assembly
gold price