ஓவல் மைதானத்தில் வரலாறு படைத்த லார்ட் ஷார்துல்…
லண்டன் ஓவல் மைதானத்தில் ஷார்துல் தாக்குர் தொடர்ச்சியாக 3 அரைசதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி இந்த ஸ்கோரை எட்டும் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை. முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் ஜடேஜா, ரஹானே மற்றும் ஷார்துல் தாக்குர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு கொண்டு வந்தனர்.
இந்த போட்டியில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை ஜடேஜா நழுவ விட்டார், ஆனால் ரஹானே மற்றும் ஷார்துல் தாக்குர் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஷார்துல் தாக்குர் லண்டன் ஓவர் மைதானத்தில் விளையாடிய தொடர்ச்சியான மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்த வெளிநாட்டவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
அதாவது இதற்கு முன்னதாக லண்டன் ஓவல் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று அரைசதம் அடைத்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் தாக்குரும் இணைந்துள்ளார். ஓவல் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று அரைசதம் அடித்தவர்கள் டான் பிராட்மேன் மற்றும் ஆலன் வாடர் ஆகியோர் இதற்கு முன்பாக இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த சாதனை பட்டியலில் தற்போது தாக்குர் இணைந்துள்ளார்.
Shardul Thakur joins a list of elite names with his third successive fifty-plus score at The Oval ????#WTC23 | #AUSvIND pic.twitter.com/RerHvEpZPL
— ICC (@ICC) June 9, 2023