#IPL2022: அதிவேக அரைசதம் பட்டியலில் இரண்டாம் இடத்தில் லிவிங்ஸ்டன்.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சிக்ஸர், பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன், அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் அடித்தனர். 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் சிக்ஸர், பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன், 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். 7 பவுண்டரி, 4 சிக்ஸர் என மொத்தம் 64 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் வேகமான அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். முதல் இடத்தில் கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ் இருக்கிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 56 ரன்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025