Ind vs Aus WTC Final Day 3 live: முதல் இன்னிங்ஸ் அடித்தளம்… ஆஸ்திரேலியா 295 ரன்கள் முன்னிலை.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 151/5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தற்போது 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய இரண்டாவது இன்னிங்சில் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 123 ரன்கள் எடுத்துள்ளது. லபுஸ்சன் 41* ரன்களும், க்ரீன் 7* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.