இன்றைய 2-வது போட்டியில் டெல்லி -ஹைதராபாத் அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வுசெய்தனர்.
9 ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட்டை இழக்காமல் 76 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் தவான் 26 ரன்களும் , பிருத்வி ஷா 48 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், களமிறங்கியாகியுள்ளனர். 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் கூட இழக்காமல் 51 ரன்கள் எடுத்துள்ளனர். அடுத்ததாக 7 ஓவர்கள் முடிவில் 60 ரன்கள் எடுத்துள்ளனர். இதுவரை ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் இருவரும் இணைந்து 7 பவுண்டரிகளும் , 2 சிக்ஸர்களும் விளாசியுள்ளனர்.
8 வது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினர் அப்போது டு பிளெசிஸ் அந்த பந்தை பவுன்டரியை நோக்கி விளாசியுள்ளார். 8 ஓவர்கள் முடிவில் 68 ரன்கள் அடித்துள்ளனர். 9 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 74 ரன்கள் எடுத்துள்ளனர். தொடக்கத்தில் இருந்து சென்னை அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
10 ஓவரை யுஸ்வேந்திர சாஹல் வீசியபோது, ருதுராஜ் அந்த பந்தை இறங்கி அடித்தபோது கைல் ஜேமீசன் கையில் பந்து கொடுத்து 33 ரன்களில் ஆட்டமிழந்தர்.11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளனர்.
12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளனர், இந்த ஓவரில் சுரேஷ் ரெய்னா 76 மீட்டர் தொலைவில் சிக்ஸர் ஒன்றை விளாசியுள்ளார்.
13 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்துள்ளனர்.
14 வது ஓவரின் முதல் பந்தில் டு பிளெசிஸ் தனது அரைசதத்தை கடந்தார், அடுத்ததாக 4 வது பந்தில் சுரேஷ் ரெய்னா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் , அவரை தொடர்ந்து டு பிளெசிஸ்யும் 50 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளனர். 16 ஓவரில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் விளாசியுள்ளார். மேலும் ராய்யுடு கடைசி பந்தில் சிக்ஸர் விளாசியுள்ளார். ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுத்துள்ளனர் மொத்தமாக 3 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 134 ரன்கள் எடுத்துள்ளனர்.
17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளனர். ஜடேஜா 16 ரன்களுடன், ராய்யுடு 14 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கின்றார்கள். 18 வது ஓவரின் 3 வது பந்தில் ராய்யுடு 14 ரன்களில் ஆட்டமிழந்தார், ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளனர்.
20 வது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினர் அப்போது ஜடேஜா தொடர்ந்து 4 சிக்ஸர்கள் அடுத்ததாக 2 ரன்கள் அடுத்த பந்து பவுண்டரி என தனது அதிரடியை காட்டியுள்ளார், இதன் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார். 20 வது ஓவரில் மட்டும் 37 ரன்கள் ஜடேஜா குவித்துள்ளார். இந்த போட்டியில் ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் விளாசியுள்ளார். மொத்தமாக சென்னை அணி 191 ரன்கள் எடுத்துள்ளனர்.
அதிகபட்சமாக பெங்களூர் அணியில் ஹர்சல் படேல் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார், அடுத்ததாக 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, தேவதூத் பாடிக்கல் களமிறங்கி உள்ளனர், முதல் ஓவர் முடிவில் 10 ரன்கள் எடுத்துள்ளனர். 2 ஓவர் முடிவில் 28 ரன்கள் எடுத்துள்ளனர். இந்த ஓவரில் தேவதூத் பாடிக்கல் 2 சிக்ஸர்கள் விளாசினார். 4 வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
5 ஓவர்கள் முடிவில் கடைசி பந்தில் படிக்கல் 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார், ஓவரின் முடிவில் 54 ரன்கள் எடுத்துள்ளனர். அவரை தொடர்ந்து மெக்ஸ்வெல் களமிறங்கியுள்ளார்.
6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளனர். 7 வது ஓவரின் 2 வது பந்தில் வாசிங்டன் சுந்தர் 7 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார், ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளனர்.
8 ஓவர்கள் முடிவில் 73 ரன்கள் எடுத்துள்ளனர். 9 வது ஓவரின் 5 வது பந்தில் மெக்ஸ்வெல் 22 ரங்களில் வெளியேறினார். ஓவரின் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளனர்.
10 ஓவரின் 4 வது பந்தில் டேனியல் கிறிஸ்டன் 1 ரன்னில் விக்கெட் இழந்து வெளியேறினார். ஓவரின் முடிவில் 83 எடுத்தனர். 11 ஓவரின் முதல் பந்தில் ஏபி டிவில்லியர்ஸ் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பெங்களூர் அணி 83 ரன்கள் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது தோல்வியை தழுவியது. இதன் மூலம் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…