ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 13 தமிழக வீரர்கள்.. யாரென்று தெரியுமா?
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் மொத்தம் 13 தமிழக வீரர்கள் விளையாடவுள்ளனர்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நெருங்கிவரும் நிலையில், தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், 57 வீரர்களை ரூ.143.69 கோடிக்கு ஏலத்தில் எடுத்தன.
இந்தாண்டு நடந்த ஏலத்தில் தமிழக வீரர்கள் மீது ஏலத்தின்போது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக, ஷாரூக்கானை 5.25 லட்சத்திற்கு பஞ்சாப் அணி எடுத்தது. இந்தநிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 13 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக வீரர்கள்:
அதேபோல இந்தாண்டு ஐபிஎலில் ஆர்.அஸ்வின், தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், விஜய்ஷங்கர், டி.நடராஜன், முருகன் அஸ்வின், ஜெகதீசன், சாய் கிஷோர், சந்தீப் வாரியர் ஆகியோருடன் ஷாருக்கான், ஹரிநிஷாந்த், எம்.சித்தார்த் ஆகியோர் விளையாடவுள்ளனர்.