உலகக்கோப்பையில் அதிக தோல்விகள் சந்தித்த அணிகளின் பட்டியல் !
நேற்று முன்தினம் செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடந்த போட்டியில் இலங்கை , தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது . இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.பிறகு இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் விளையாடி வரும் 10 அணிகளில் எந்த அணி அதிக முறை தோல்வியை தழுவியது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது.இப்பட்டியலில் அதிக தோல்வியை சந்தித்து இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.
உலகக்கோப்பையில் இலங்கை அணி விளையாடிய போட்டிகளில் 37 முறை வெற்றியும் ,38 முறை தோல்வியடைந்து உள்ளது.இப்பட்டியலில் இடம் பெற்று உள்ள மூன்று அணிகளும் வெற்றியை விட அதிக தோல்விகளை தான் அதிகம் சந்தித்து உள்ளது.
இலங்கை (37 வெற்றி, 38 தோல்வி)
பங்களாதேஷ் (14 வெற்றி, 23 தோல்வி)
ஆப்கானிஸ்தான் (1 வெற்றி , 12 தோல்வி )