உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் சதம் அடித்தும் தோல்வியடைந்த போட்டிகளின் பட்டியல் !
நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து , இந்திய அணி மோதியது.பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் சேர்த்தனர்.
இப்போட்டியில் 338 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன்கள் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர்.பிறகு நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 109 பந்தில் 102 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.இப்போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையில் சதம் அடித்து அப்போட்டியில் தோல்வியடைந்த போட்டிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர்கள் சதம் அடித்து நான்கு முறை அப்போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.அதில் சச்சின் இரண்டு போட்டிகளில் சதம் அடித்தும் தோல்வியடைந்து உள்ளது.
சச்சின் – 137 vs இலங்கை (1996)
அஜய் ஜடேஜா – 100 * vs ஆஸ்திரேலியா (1999)
சச்சின் – 111 vs தென்னாபிரிக்கா (2011)
ரோஹித் – 102 vs இங்கிலாந்து (2019)