IPL2022Auction: வெளியானது 590 வீரர்களின் பட்டியல்: எந்த அணிக்கு எவ்வளவு பட்ஜெட் தெரியுமா..?

Published by
Castro Murugan

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2022) மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்த முறை ஏலம் எடுக்கப்படும் அனைத்து வீரர்களின் பட்டியலை BCCI வெளியிடப்பட்டுள்ளது.  

பெங்களூருவில் ஐபிஎல் 2022 ஏலம் வரும் 12 மற்றும் 13 -ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தமாக ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதில்,  370 இந்திய வீரர்களும்,  220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். இம்முறை ஏலத்தில் எடுக்கப்படும் 590 கிரிக்கெட் வீரர்களில் 228 பேர் கேப்டு வீரர்கள், 355 பேர் கேப் செய்யப்படாத வீரர்கள் இவர்களைத் தவிர அசோசியேட் நாடுகளில் நமீபியாவைச் சேர்ந்த மூன்று வீரர்களும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இருவரும், ஜிம்பாப்வே மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் ஆவார்.

ஒரு அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்கலாம். இந்த ஐபிஎல் தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, இஷான் கிஷன், அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சாஹல் போன்ற நாட்டு வீரர்களின் பெயர்களும் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இருப்பினும், ஐபிஎல்-ன் பெருமைக்குரிய ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்ற பெரிய பெயர்கள் இந்த முறை பட்டியலில் இடம்பெறவில்லை.

வெளிநாட்டு வீரர்ளில்  இந்த முறை டு பிளெசிஸ், டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ரபாடா, டிரென்ட் போல்ட், குயின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ, ஷகிப் அல் ஹசன், வனிந்து ஹசரங்க உள்ளிட்ட மற்ற வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படை விலை ரூ.2 கோடி மற்றும் ரூ.1.5 கோடி மதிப்பில் 20 வீரர்கள் உள்ளனர். மேலும், 34 வீரர்களின் பெயர்கள் அடிப்படை விலையான ரூ.1 கோடியில் உள்ளது. ஆஸ்திரேலியா (47), வெஸ்ட் இண்டீஸ் (34), தென் ஆப்ரிக்கா (33) ஆகிய நாடுகளில் அதிக வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

எந்த அணியில் எவ்வளவு பணம்:

பஞ்சாப் – 72 கோடி
ஹைதராபாத் – 68 கோடி
ராஜஸ்தான் – 62 கோடி
பெங்களூர்  – 57 கோடி
மும்பை – 48 கோடி
சென்னை  – 48 கோடி
கொல்கத்தா – 48 கோடி
டெல்லி  – 47.5 கோடி
லக்னோ – 60 கோடி
அகமதாபாத் – 53 கோடி

பஞ்சாப் கிங்ஸ்அணியிடம்  அதிகபட்சமாக 72 கோடியும் மற்றும் டெல்லியில் குறைந்த தொகையான ரூ.47.5 கோடி உள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

23 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

1 hour ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

3 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

3 hours ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

3 hours ago