IPL2022Auction: வெளியானது 590 வீரர்களின் பட்டியல்: எந்த அணிக்கு எவ்வளவு பட்ஜெட் தெரியுமா..?
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2022) மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்த முறை ஏலம் எடுக்கப்படும் அனைத்து வீரர்களின் பட்டியலை BCCI வெளியிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஐபிஎல் 2022 ஏலம் வரும் 12 மற்றும் 13 -ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
மொத்தமாக ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். இம்முறை ஏலத்தில் எடுக்கப்படும் 590 கிரிக்கெட் வீரர்களில் 228 பேர் கேப்டு வீரர்கள், 355 பேர் கேப் செய்யப்படாத வீரர்கள் இவர்களைத் தவிர அசோசியேட் நாடுகளில் நமீபியாவைச் சேர்ந்த மூன்று வீரர்களும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இருவரும், ஜிம்பாப்வே மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் ஆவார்.
ஒரு அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்கலாம். இந்த ஐபிஎல் தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, இஷான் கிஷன், அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சாஹல் போன்ற நாட்டு வீரர்களின் பெயர்களும் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், ஐபிஎல்-ன் பெருமைக்குரிய ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்ற பெரிய பெயர்கள் இந்த முறை பட்டியலில் இடம்பெறவில்லை.
வெளிநாட்டு வீரர்ளில் இந்த முறை டு பிளெசிஸ், டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், ரபாடா, டிரென்ட் போல்ட், குயின்டன் டி காக், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ, ஷகிப் அல் ஹசன், வனிந்து ஹசரங்க உள்ளிட்ட மற்ற வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படை விலை ரூ.2 கோடி மற்றும் ரூ.1.5 கோடி மதிப்பில் 20 வீரர்கள் உள்ளனர். மேலும், 34 வீரர்களின் பெயர்கள் அடிப்படை விலையான ரூ.1 கோடியில் உள்ளது. ஆஸ்திரேலியா (47), வெஸ்ட் இண்டீஸ் (34), தென் ஆப்ரிக்கா (33) ஆகிய நாடுகளில் அதிக வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
எந்த அணியில் எவ்வளவு பணம்:
பஞ்சாப் – 72 கோடி
ஹைதராபாத் – 68 கோடி
ராஜஸ்தான் – 62 கோடி
பெங்களூர் – 57 கோடி
மும்பை – 48 கோடி
சென்னை – 48 கோடி
கொல்கத்தா – 48 கோடி
டெல்லி – 47.5 கோடி
லக்னோ – 60 கோடி
அகமதாபாத் – 53 கோடி
பஞ்சாப் கிங்ஸ்அணியிடம் அதிகபட்சமாக 72 கோடியும் மற்றும் டெல்லியில் குறைந்த தொகையான ரூ.47.5 கோடி உள்ளது.
???? NEWS ????: IPL 2022 Player Auction list announced
The Player Auction list is out with a total of 590 cricketers set to go under the hammer during the two-day mega auction which will take place in Bengaluru on February 12 and 13, 2022.
More Details ????https://t.co/z09GQJoJhW pic.twitter.com/02Miv7fdDJ
— IndianPremierLeague (@IPL) February 1, 2022