“சிஎஸ்கே, மும்பை – இந்தியா, பாகிஸ்தான்” போன்றது – ஹர்பஜன் சிங்
எப்போதெல்லாம் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக பார்க்கப்படும் – ஹர்பஜன் சிங்
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் ஒரு காலத்தில் மும்பை அணிக்காக விளையாடியவர் என்று அனைவரும் அறிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பதும் அறிந்த ஒன்றுதான். சிஎஸ்கே அணிக்காக எப்போது விளையாட தொடங்கினாரோ அப்போதிலிருந்து தமிழில் ட்வீட் போடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய ஹர்பஜன் சிங், சிஎஸ்கே ஜெர்சியை முதலில் அணிந்தபோது ஒரு விசித்திரமாக இருந்தது. கனவுதானா என்று மனதில் தோன்றியது என கூறியுள்ளார். பின்னர் எப்போதெல்லாம் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக பார்க்கப்படும். அப்போது இரு அணிகளின் ஆட்டம் மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்றும் திடீரென மும்பை அணி ஜெர்சியை அணியாமல் சிஎஸ்கே ஜெர்சியை அணியும்போது கடினமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை பழகிக்கொள்ள சில நாட்கள் ஆனது எனவும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக விளையாடினோம். அதனால் அந்த போட்டி சீக்கிரமாகவே முடிந்தது. முதல் சீசன் முழுக்க எனக்கு ஒரு விசித்திரமாகி இருந்தது. அதன் பின் கோப்பையை வென்றோம், இரண்டாவது சீசனில் இறுதிப்போட்டி வரை வந்தோம். ஆனால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் போட்டி சிறப்பாகவே இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.