ப்பா…கண் இமைக்கும் நேரத்தில் ‘கில்’ விக்கெட்டை தூக்கிய மின்னல் நாயகன் ‘தோனி’…வைரலாகும் வீடியோ.!!

Shubman Gill DHONI

சென்னை கேப்டன் எம்எஸ் தோனி, குஜராத் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில்லை ஸ்டம்பிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கத்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டி நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது என்று கூறலாம்.

குறிப்பாக, குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது அணியின் தொடக்க  ஆட்டக்காரரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஜடேஜா பந்து வீச வந்தார். அப்போது அவர் வீசிய அந்த பந்தை எதிர்கொண்ட போது கண்ணிமைக்கும் நேரத்தில் கேப்டன் தோனி ஸ்டம்பிங் செய்து கில் விக்கெட்டை அலேக்காக  தூக்கினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில்  தோனி சுப்மன் கில்லை ஸ்டம்பிங் செய்து தூக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மின்னல் நாயகன் தோனி என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த் குஜராத் அணி 20 ஒவர்களில் 214 ரன்கள் குவித்தது. இதன்பின் சென்னை அணி களமிறங்கியதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனவே 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்