PBKS : ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை அணி போட்ட ட்வீட்க்கு வேடிக்கையாக ரிப்ளெ செய்துள்ளனர்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 42-வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 261 ரன்களை குவித்தனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250+ மேற்பட்ட ரன்களை அடிப்பது சகஜம் ஆகியுள்ளது.
அதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியினர் கொல்கத்தா அணியை விட அதிரடி காட்டினார்கள். அதிலும் பேர்ஸ்டோ, ஷஷாங் சிங் அதிரடியில் பஞ்சாப் அணி 10 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகள் இந்த ஐபிஎல் தொடரில் முறியடிக்கபட்டன.
அதிலும், டி20 போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்த அணியாக பஞ்சாப் அணி புதிய சாதனையை படைத்தது. இந்த வெற்றிக்கு பிறகு பல ஐபிஎல் அணிகள் தொடர்ந்து அவர்களது X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சிஎஸ்கே அணி தனது X தளத்தில்,முதல்வன் திரைப்படத்தில் வரும் மணிவண்ணன் அவர்கள் நடித்த ஒரு காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்து, ” மொத்தமாக 523 ரன்கள், 42 சிக்ஸர்கள், உலக விளையாட்டுக்கு அப்பாற்பட்டது”, என பதிவிட்டிருந்தனர்.
அதற்கு பஞ்சாப் அணி, சிஎஸ்கே அணியின் டீவீட்டுக்கு ரிப்ளெ வேடிக்கையாக ரிப்ளெ செய்துள்ளனர். பஞ்சாப் அணி தங்களது X தளத்தில், “நன்றி, விரைவில் சந்திப்ப்போம்”, என வேடிக்கையாக சிஎஸ்கேவுக்கு ரிப்ளெ ட்வீட் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவானது ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் இது வரை சென்னை, பஞ்சாப் அணிகள் இது வரை மோதவில்லை, ஆனால் வருகிற நாட்களில் இரண்டு போட்டிகள் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…