சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அந்த வீரருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என அவரது கருத்தை கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறாமல் இருந்தார், அவருக்கு பதிலாக சிவம் துபே களம் கண்டிருந்தார்.
ஒரு நல்ல ஆல்ரவுண்டர் வீரர் அணியில் இருக்க வேண்டுமென சிவம் துபேவை எடுத்துள்ளார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அன்றைய போட்டியில் அவர் பந்தும் வீசவும் இல்லை பேட்டிங் போதிலும் போதும் கடைசியாகவே வந்தார். மேலும், 2 பந்துகளை சந்தித்து அதில் ரன்கள் எதுவும் எடுக்கவும் இல்லை.
தற்போது, இதனை சுட்டி காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஈஎஸ்பிஎன் இன்ஃபோ (ESPN CricketInfo) பத்திரிக்கைக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் பேசி இருப்பார். அவர் கூறுகையில், “ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக சிவம் துபேவை அணியில் எடுத்திருக்கிறீர்கள் ஆனால் அவர் அயர்லாந்து அணியுடனான போட்டியில் பந்து வீசவில்லை. அவர் பந்து வீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கலாமே.
சஞ்சு சாம்சன் அவரைவிட சிறப்பான பேட்ஸ்மேனாக விளையாடுவார். அவரை களம் இருக்கலாம், சஞ்சு சாம்சன் மிகவும் பக்குவத்துடனும் இருக்கிறார் என நான் நம்புகிறேன். மேலும், சஞ்சு சாம்சன் தற்போது சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார். எனவே, இப்போதே அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…