சென்னை : நேற்று நடைபெற்ற குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியிடம், ஹைதரபாத் அணி தோல்வியடைந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தோல்வியை பற்றி கூறி பேசி இருந்தார்
ஐபிஎல் தொடரானது தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தொடரின் முதல் குவாலிபயர் போட்டியானது நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த குவாலிபயர் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதனால் அதிரடியாக விளையாடலாம் என களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
அதை தொடர்ந்து ராகுல் த்ரிப்பாத்தியின் நிதானமான ஆட்டத்தால், ஹைதரபாத் அணி சரிவிலிருந்து மீண்டது, சிறப்பாக விளையாடிய அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து கிளாஸ்ஸனும், கம்மின்சும் சற்று அதிரடி காட்ட ஹைதராத் அணி இறுதியில் 19.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து எளிதான இலக்கை அடைய களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடினார்கள்.
தொடக்க வீரர்களை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரின் ஆட்டத்தால் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இந்த போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தோல்வியை பற்றி கூறி இருந்தார்.
அவர் பேசுகையில், “இந்த தோல்வியை நாங்கள் பின்னால் வைத்து முன்னோக்கி செல்ல வேண்டும். டி20 கிரிக்கெட்டில், சில கடுமையான நாட்களும் உங்களுக்கு உண்டு. இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு மேலும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சில வீரர்களுக்கு நல்ல ஒரு தொடக்கம் அமையவில்லை, மேலும் எங்களால் சிறப்பான பந்து வீச்சையும் கொடுக்க முடியாவில்லை. விக்கெட்டுகள் அதிமாக சரிந்ததால், கூடுதல் பேட்டிங் தேவை என்று நாங்கள் நினைத்தோம்.
மேலும், கொல்கத்தா அணி நன்றாக பந்து வீசினார்கள், அதன் பின் விக்கெட் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. இந்த சீசனில் எங்களுக்கு இன்னும் நல்ல வேலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம், தப்பு செய்ததை சென்னையில் மாற்றி காட்டுவோம் என நம்புகிறேன்”, என்று போட்டி முடிந்த பிறகு பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…