கேப்டனா இப்படி இருக்கனும்! பந்துவீச்சில் கெத்து காட்டிய சூர்ய குமார் யாதவ்!
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், 3 டி 20, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் 3 டி20 போட்டிகளும் நடந்து முடிந்த நிலையில், மூன்றிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், விமர்சனங்கள் அனைத்திற்கும் இந்த தொடரை வென்று கொடுத்து சூர்ய குமார் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். கேப்டன் சி மட்டுமின்றி, இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடரில் பேட்டிங்கிலும் அவர் கலக்கி இருக்கிறார்.
முதல் போட்டியில் 58 ரன்கள், இரண்டாவது போட்டியில் 26 ரன்கள் எடுத்திருந்தார். பேட்டிங்கில் மட்டுமின்றி கடைசி போட்டியில் பந்துவீச்சில் கலக்கி உள்ளார். இலங்கைக்கு எதிரான கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில், சூர்ய குமார் யாதவ் பந்துவீசி ஒரே ஒருவரில் தொடர்ச்சியாக 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
மேலும், நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 138 ரண்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியும் 137 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. இதன் சூப்பர் ஓவர் நடைபெற்றது.
முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது, அதன்படி இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் சூப்பர் ஓவரை வீசினார். அதில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்த இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், இந்திய அணிக்கு 3 ரன்களை மட்டுமே எடுக்க வேண்டி இருந்த நிலையில், இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. அதன்படி முதல் பந்திலேயே சூரியகுமார் யாதவ் பந்தை பவுண்டரிக்கு அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில், கேப்டனா இப்படி இருக்கனும் என சூர்ய குமார் யாதவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.