லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: மணிப்பால் டைகர்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!

ManipalTigers

மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் 6-வது லீக் போட்டியானது டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் மணிபால் டைகர்ஸ் அணியில் முதலில் உத்தப்பா, வால்டன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்காளாக களமிறங்கி அதிரடியாக விளையாடினார்கள். பில்வாரா கிங்ஸ் அணி வீசும் அனைத்து பந்துகளையும் பறக்கவிட்டு உத்தப்பா அரைசதம் கடந்தார். பிறகு ராகுல் ஷர்மா வீசிய பந்தில் ஜெசல் கரியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இமாத் வாசிம்…!

இவர் வெளியேறிய சில நிமிடங்களில் வால்டன் அரைசதம் அடிக்க, மசகட்சா களமிறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த மசகட்சா 30 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து Retd hurt ஆகி வெளியேறினார். இதன்பிறகு அபாரமாக விளையாடிய வால்டன் 55 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என அடித்து சதம் விளாசினார்.

இறுதியில் அவரும் ஆட்டமிழக்க கிராண்ட்ஹோம், பெரேரா இருவரும் களத்தில் இருந்தனர். முடிவில் மணிபால் டிகேர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 212 ரன்கள் என்ற இலக்கில் பில்வாரா கிங்ஸ் அணியில் திலகரத்ன டில்ஷான், சாலமன் மிரே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

மக்கள் என்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்கள்.! சஞ்சு சாம்சன் பதில்..

இதில் சாலமன் 3 ரன்களுடன் வெளியேற அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லெண்டல் சிம்மன்ஸ் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதன்பிறகு திலகரத்ன டில்ஷான் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ராபின் பிஸ்ட், இர்பான் பதான், ஜெசல் கரியா அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தார்கள். யூசுப் பதான், கிறிஸ்டோபர் பார்ன்வெல் இருவரும் தலா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இக்பால் அப்துல்லா, அனுரீத் சிங் இருவரும் களத்தில் இருந்து ஓரளவு ரன்கள் எடுத்தனர். முடிவில் பில்வாரா கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மணிப்பால் டைகர்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மணிபால் டைகர்ஸ் அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்