மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த ஆண்டிற்கான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், நேற்று (புதன் கிழமை) நான்காவது லீக் போட்டியானது நடைபெற்றது. ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ இன்டர்நேஷனல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இர்பான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில், கிறிஸ் கெய்ல் மற்றும் ஜாக் காலிஸ் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாட, ஜாக் காலிஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரிச்சர்ட் லெவி களமிறங்கி விளையாட கிறிஸ் கெய்ல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து கிறிஸ் கெய்ல், ராகுல் சர்மா வீசிய பந்தில் 52 ரன்களில் வெளியேற, அடுத்த சில நிமிடங்களில் ரிச்சர்ட் லெவி ஆட்டமிழந்தார். இதன்பிறகு கெவின் ஓ பிரையன், பார்த்தீவ் படேல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இறுதியில் ஜுன்ஜுன்வாலா, குரானா இருவரும் தலா 24 ரன்கள் எடுத்தனர். ஜுன்ஜுன்வாலா களத்தை விட்டு வெளியேற பாட்டியா களமிறங்கி 7 ரன்கள் எடுத்தார். முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்தது. ராகுல் சர்மா, ஜெசல் கரியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனால் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பில்வாரா கிங்ஸ் அணியில், முதலில் சாலமன் மிரே, திலகரத்ன டில்ஷான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி, பெரிதாக சோபிக்காமல் களத்தை விட்டு வெளியேறினார்கள். இதன்பிறகு லெண்டல் சிம்மன்ஸ் களமிறங்கி அதிரடி காட்ட, அவருடன் இணைந்து விளையாடிய ராபின் பிஸ்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக பினால் ஷா, யூசுப் பதான் இருவரும் ஆட்டமிழக்க, லெண்டல் சிம்மன்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இவர்களையடுத்து இர்பான் பதான், கிறிஸ்டோபர் பார்ன்வெல் இருவரும் தங்களது விக்கெட்டை இழக்க, ஜெசல் கரியா, லெண்டல் சிம்மன்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்கள். லெண்டல் சிம்மன்ஸ் 99* ரன்கள் வரை அடித்தும் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.
முடிவில் பில்வாரா கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக லெண்டல் சிம்மன்ஸ் 99* ரன்கள் எடுத்தார். குஜராத் அணியில் ராயத் எம்ரிட், ஈஸ்வர் சவுத்ரி இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். மேலும், இன்று நடைபெறும் 5 வது போட்டியில் இந்தியா கேபிடல்ஸ் மற்றும் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…