ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடர் வருகின்ற 23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3-ம் தேதி வரை 5 நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. டி20 போட்டிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராய்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் உலகக்கோப்பையில் விளையாடிய அனைத்து மூத்த வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பையில் விளையாடிய சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவர் மட்டுமே இந்த டி20 தொடரில் விளையாட உள்ளனர். மற்ற வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் வரும் 23-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…