தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்…போட்டிக்கு பிறகு ஜெய்ஸ்வால் ஸ்பீச்.!!
நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால், தோனி மற்றும் கோலியுடன் பேசியது தனது ஆட்டத்திற்கு உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின, இதில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 202/5 ரன்கள் குவித்தது.
ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் என மொத்தம் 77 ரன்கள் அதிரடியாக குவித்து, சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். போட்டிக்கு பிறகு பேசிய அவர், அனுபவம் நிறைந்த வீரர்களான தோனி மற்றும் விராட் கோலியுடன் தான் நிறைய பேசியதாகவும், அது எனது ஆட்டத்திற்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
நான் தொடர்ந்து அவர்களுடன் கிரிக்கெட் குறித்து உரையாடுவது தனது பேட்டிங்கிற்கு நிறைய கற்றுக்கொண்டதாக ஜெய்ஸ்வால் கூறினார். மேலும் தோனியும் ஆட்டத்திற்கு பிறகு அளித்த பெட்டியில் ஜெய்ஸ்வால் பேட்டிங் குறித்து புகழ்ந்து பேசினார், ஜெய்ஸ்வால் நல்ல பந்துகளிலும் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார் என்று தோனி கூறினார்.