இந்தியாவில் வருடம்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தற்போது ஓரிரு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார்.
மலிங்காவை பின்னுக்கு தள்ளிய ஹசரங்கா..? என்ன சாதனை தெரியுமா..?
இந்த ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் முதல் 15 நாள் போட்டியின் அட்டவணையை முதலில் வெளியிட உள்ளதாக அவர் கூறி உள்ளார். இந்தியாவில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காரணத்தால் தான் இதுவரை ஐபிஎல் சீசன் 17-க்கான அட்டவணையை இன்னும் வெளியிடாமல் இருப்பதற்கான காரணமாகும் என்று அருண் துமால் கூறி உள்ளார்.
2009-ம் ஆண்டின் ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவிற்கு வெளியே தென் ஆப்ரிக்காவில் நடத்த பெற்றது. அதன் பின் 2014-ம் ஆண்டு பொது தேர்தல் காரணமாக பாதி போட்டிகள் இந்தியாவிலும், பாதி போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளிலும் (UAE) நடைபெற்றது. பிறகு 2019-ம் ஆண்டு பொது தேர்தல்களை மீறி இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது.
இந்த வருடம் முழு ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் எனவும் மேலும், ஜூன் மாதம் 5-ம் தேதி நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு மார்ச் 22-ம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் தொடர் மே 26-ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறினார்.
கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக நடைபெறும் என்றும் பத்திரிகையாளர்களிடம் ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் கூறி உள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…