3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்து 63 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட இறுதியில் 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 75* , ஜடேஜா 50* ரன்கள் எடுத்த நிலையில் இருந்தனர்.
தொடர்ந்து 2-ஆம் நாள் விளையாடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 52, ஷ்ரேயாஸ் ஐயர் 105, ஜடேஜா 50 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 57 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 129 ரன்கள் சேர்த்தனர். களத்தில் டாம் லாதம் 50*, வில் யங் 75* ரன்களுடன் இருந்தனர். இன்றைய 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்து நியூஸிலாந்து அணி விக்கெட்டை பறிகொடுக்க தொடங்கியது. இறுதியாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் அக்சர் படேல் 5, அஸ்வின் 3 விக்கெட்டை பறித்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 95, வில் யங் 89 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 49 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரராக களமிங்கிய சுப்மன் கில் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்து 63 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. களத்தில் புஜாரா 9, மயங்க் அகர்வால் 4 ரன்களுடன் உள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…